உடற்பயிற்சி செய்தவுடன் உண்ணக்கூடாதவை


நாம் எவ்வளவு தான் உடற்பயிற்சியை சரியாக செய்தாலும், சாப்பிடுவதில் தவறு செய்கிறோம். அதாவது நாம் உணவை சாப்பிடுகிறோம் என்றால் அதற்கென்று நேரம் உள்ளது. அந்த நேரத்தை சரியாக பின்பற்றி சாப்பிடாமல் இருந்தால், அதற்கான விளைவுகள் நேரிடக் கூடும்.


அதிலும் மற்ற நேரங்களில் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகளை விட, உடற்பயிற்சி செய்து முடித்த உடனேயே, கண்ட கண்ட உணவுகளைச் சாப்பிட்டால் அது மிகவும் ஆபத்தானது. ஏனெனில் உடற்பயிற்சியின் போது உடலில் உள்ள குளுக்கோஸானது எரிபொருளாக மாறுகிறது. எனவே இந்த நேரம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் உணவுகளை சாப்பிடாமல் இருக்க வேண்டும்.


சீஸ் 
நீண்ட தூரம் ஓடியப் பின்பு, சீஸ் உணவுகளை அதிகம் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அதில் சாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் உப்பு அதிகமாக உள்ளது. எனவே இத்தகைய உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

பதப்படுத்தப்பட்ட இறைச்சி 
உடற்பயிற்சி செய்த பின்னர், பதப்படுத்தப்பட்ட இறைச்சியால் செய்யப்பட்ட உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் பதப்படுத்தப்பட்ட இறைச்சியில் கொழுப்புகள் மற்றும் உப்பு அதிகமாக இருக்கும். இதனால் அவை செரிமான மண்டலத்தின் இயக்கத்தை குறைத்துவிடும்

பிரட் 
வெள்ளை பிரட் எனப்படும் மைதாவால் ஆன பிரட் சாப்பிடுவதை அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில் உடற்பயிற்சிக்குப் பின், இந்த பிரட் சாப்பிட்டால், அவை உடலில் செல்லும் போது மிகவும் எளிதில் சர்க்கரையாக மாறிவிடும். எனவே அப்போது வேண்டுமெனில் நவதானியங்களால் ஆன பிரட்டை(கோதுமை பிரட்) சாப்பிடலாம்

பழ ஜூஸ் 
எவ்வளவு தான் பழங்கள் உடலுக்கு நல்லதாக இருந்தாலும், உடற்பயிற்சிப் பின்னர் உடனே சாப்பிடக் கூடாது. இதனால் அதில் உள்ள சர்க்கரை, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரித்துவிடும். ஒருவேளை ஏதாவது குடிக்க வேண்டுமென்று தோன்றினால், தண்ணீர் அல்லது ஐஸ் துண்டுகள் போட்ட மூலிகை டீ அல்லது இளநீரை குடிக்கலாம். இது மிகவும் ஆரோக்கியமானது.


0 comments:

Your Comments Please!

இது பற்றிய உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள்.Comments பதிவதில் சிரமம் ஏற்பட்டால் உங்கள் கருத்துக்களை adiraipoonga@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனே பதியப்படும்.