AAMF-இன் இரண்டாம் ஆண்டு நோன்பு பெருநாள் சந்திப்பு அழைப்பிதழ்



பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும். [வரஹ்]

அல்லாஹ்வின் பேரருளால் 2011 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அதிரை அனைத்து முஹல்லா
கூட்டமைப்புக்கு (AAMF) அடித்தளமாக கடந்த வருடம்
 துபாயில் நடந்த நோன்பு பெருநாள் சந்திப்பு அமைந்தது நாம் அனைவரும் அறிந்ததே.

இதன்தொடர்ச்சியாக, அதிரை, லண்டன் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இவ்வமைப்பு ஏற்படுத்தப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.அல்ஹம்துலில்லாஹ்.

உள்ளூரளவிலும் வெளிநாட்டிலும்அதிரைவாசிகளை ஒருங்கிணைக்கும்ஒரே அமைப்பு இல்லாத குறையை நமது  AAMF நிவர்த்தி செய்யும் நோக்கில் பல்வேறு நாடுகளிலுள்ளஅதிரைவாசிகளுடன் சந்திப்புகளை நடத்தி ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்தி ஒவ்வொரு ஆண்டும்பெருநாட்களன்று ஒன்றுகூடல்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து வருகிறோம்.

அவ்வகையில், இன்ஷா அல்லாஹ்,இவ்வருடமும் நோன்பு பெருநாளன்று துபாய் - டேரா ஈத்கா மைதானத்தில்அதிரைவாசிகளின் சந்திப்புக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.எனவே, பெருநாள் தொழுகை முடிந்த உடன் சென்றவருடத்தைப் போன்றே ஈத்கா மைதானம் வாசலருகே அமீரகத்திலுள்ள நமதூர் சொந்தங்கள் ஒன்றுகூடி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் நீங்களும் கலந்து கொள்வதோடு ஏனைய அதிரைநண்பர்களுக்கும் தகவல் தெரிவித்து அழைத்து வரும்படி அன்புடன்அழைக்கின்றோம்.

குறிப்பு: இத்தகைய சந்திப்புகள் மூலமே வெளிநாட்டிலுள்ளஅதிரைவாசிகளுக்கிடையே புரிந்துணர்வும் ஒற்றுமையும் பலம்பெறும் என்பதால் சிரமம் பாராது கலந்துகொண்டு உங்கள் பங்களிப்பைஉறுதிசெய்து ஒத்துழைக்க வேண்டுகிறோம்.

மேலதிக விபரங்களுக்கு கீழ்காணும் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Mr. Thameem ----------       050-7480023        சம்சுல் இஸ்லாம் சங்கம் முஹல்லா
Mr. Ajmal        ----------       050-4963848        தாஜீல் இஸ்லாம் சங்கம் மேலத்தெரு முஹல்லா
Mr. Meeramohideen----     055-2320145      அல் மதரஸத்துன் நுருல் முஹம்மதியா சங்கம் கீழத் தெரு
Mr. Ismail -----------------    055-6077680         கடற்கரை தெரு ஜீம்மா பள்ளி முஹல்லா
Mr. Mohideen ------------    050-5785239          மஆதினுல் ஹஸனாத்தில் இஸ்லாமிய சங்கம் நெசவுத் தெரு
Mr. Naina -----------------    050-7397093          முகைதீன் ஜீம்மா பள்ளி முஹல்லா தரகர் தெரு
Mr. Bashir-----------------    050-9228114          மிஷ்கீன் சாஹிப் பள்ளி முஹல்லா

அன்புடன்,
அனைத்து முஹல்லாஹ் கூட்டமைப்பு
ஈத் பெருநாள் சந்திப்பு குழு
துபாய்


0 comments:

Your Comments Please!

இது பற்றிய உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள்.Comments பதிவதில் சிரமம் ஏற்பட்டால் உங்கள் கருத்துக்களை adiraipoonga@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனே பதியப்படும்.