தவிர்க்க வேண்டிய உணவுகள்



நமது உடம்பின் எரிபொருள் உணவுதான். எனவே நாம் சாப்பிடுவது, நாள் முழுவதும் நம் செயல்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சில உணவுகள் நமக்குள் உற்சாகத்தை பாய்ச்சுவதைம், சில உணவுகள் நம்மைத் தொய்ந்துபோக வைப்பதையும்
உணர்ந்திருப்போம். நாம் சுறுசுறுப்பாகச் செயல்பட வேண்டுமானால் எந்தெந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்வோமா…
சர்க்கரை அளவைக் கூட்டும் உணவுகள்
 நமக்கு `ஸ்வீட்’ சாப்பிடும் ஆசை அதிகமா? அது, `தடுக்கபட்ட’ உணவுகளில் நம்மைக் கொண்டுபோய் விட்டுவிடக் கூடும். உதாரணமாக, தித்திப்பான இனிப்பு, `கேக்’ போன்றவை. அவை நம் உற்சாகத்தை உயர்த்துகின்றன என்பது உண்மைதான். ஆனால் அது தற்காலிகமானது. பீட்சா, ஒயிட் பிரெட் சாட்விச், சாக்லேட் மற்றும் இனிப்பு வகைகளைச் சாப்பிடுவது நம் ரத்த சர்க்கரை அளவைக் கூட்டி உற்சாக அளவில் ஒரு தாவலை ஏற்படுத்தும்.
சட்டென்று ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடுவது நம் முளையின் உஷார்தன்மையைக் கூட்டும். ஆனால் சர்க்கரை அளவு குறையக் குறைய நாம் தளர்ந்து போய் விடுவோம்.
மாற்று
மேற்கண்டவற்றுக்கு பதிலாக, வேதிபொருட்கள் சேர்க்காத பனைவெல்லத்துடன் எள், பாதாம்பருப்பு, பரங்கி விதை ஆகியவற்றுடன் முழுக்கோதுமை அல்லது பல தானிய ரொட்டியுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.
பொரித்த உணவுகள்
அதிகமான கொலஸ்ட்ராலும், கொழுப்பும் நம்மை பொரித்த உணவுகளிலிருந்து விலக்காவிட்டால், இதோ இன்னும் ஒரு காரணம். சிப்ஸ், பக்கோடா, பஜ்ஜி போன்றவை செரிமானம் ஆவதற்கு ஐந்திலிருந்து ஆறு மணி நேரம் ஆகிறது. செரிமானத்தின்போது உடம்பின் அதிகமான சக்தி அதற்கே செலவாவதால், அப்போது நாம் சோம்பலாக உணர்வோம்.
மாற்று
சோயா செறிந்த நொறுக்குத் தீனிகள், ரவா இட்லி போன்றவற்றைச் சாப்பிடலாம்.
உற்சாகமூட்டும் பானங்கள்
உற்சாகமூட்டும் பானங்கள் (எனர்ஜி டிரிங்ஸ்) பல அவற்றில் உள்ள அதிகமான சர்க்கரை மற்றும் `காபீனால்’ உடனடி சக்தியை அளிக்கின்றன. ஆனால் சில மணி நேரங்களிலேயே அந்தச் சக்தி வடியத் தொடங்கிவிடும். அப்போது நாம் மேலும் தளர்ந்தவராக ஆகிவிடுவோம். பரீட்சைக்கு படிக்கும்போது விழித்திருப்பதற்காக உற்சாக முட்டும் பானங்களை பருகுவோர் விஷயத்தில் இது தெளிவான உண்மை. உற்சாகமுட்டும் பானங்கள் ஆரம்பத்தில் `காபீனின்’ உதவியால் மூளைச் சக்தியைக் கூட்டும். ஆனால் சற்று நேரத்துக்கு பின் நாம் சுத்தமாகக் களைத்து போய்விடுவோம்.
மாற்று
நமக்கு பிடித்த எந்த பழத்தைம் யோகர்ட் சேர்த்துச் சாப்பிடலாம். ஒரு பெரிய கிளாசில் பழச்சாறு அருந்தலாம். இளநீர், கரும்புச் சாறு, எலுமிச்சை ஜூஸ் போன்றவற்றையும் பருகலாம்.
பதப்படுத்திய உணவுகள்
கிரீம் பிஸ்கட்டுகள், நுடுல்ஸ், உப்பிட்ட உருளைக்கிழங்கு சிப்ஸ், கிரீம் நிறைந்த சாலட், வெண்ணை வழியும் பீட்சா ஆகியவற்றில் நிறைய சோடியம் உள்ளது. சோடியமானது தண்ணீரை ஈர்த்துக் கொள்வதால் அவை `டீஹைட்ரேஷன்’, அமைதியற்ற நிலை, எளிதாக எரிச்சலுக்குள்ளாகும் தன்மை போன்றவற்றை ஏற்படுத்தும். பதபடுத்திய உணவுகளின் தயாரிப்பின்போது அவை அதிக நாள் கெடாமல் இருப்பதற்காக `ஹைட்ரேஷன் பிராசஸுக்கு’ உட்படுத்தப்படுகின்றன. அவை பல்வகை `டிரான்ஸ்பேட்ஸை’ ஏற்படுத்துகின்றன. இந்தக் கொழுப்புகளைச் சாப்பிடுவது, குறிப்பிடத்தக்க அளவு சக்தியைக் குறைக்கும்.
மாற்று
வறுத்த தானியங்களை சாப்பிடலாம்.
காபி
நாம் `டல்’லாக உணரும்போது சூடாக ஒரு `கப்’ காபி சாபிடலாம் என்று நினைப்போம்- அது உடனடியாகத் தெம்பூட்டும் என்ற எண்ணத்தில். ஒரு கோப்பை `ஸ்ட்ராங்’ காபி நம்மை விழிப்பாக வைத்திருக்கும் என்பது உண்மை. ஆனால் அது சிறிது நேரத்துக்குத்தான்.
காபியில் உள்ள `காபீன்’, நம் உள்ளமைப்பைத் தூண்டி சோர்வை விடுவிக்கிறது.  ஆனால் நீண்ட கால அடிப்படையில் பார்த்தால் அது அடிமைத்தன்மையை ஏற்படுத்திவிடும்.
அதிகமாகக் காபி பருகுவது எலும்புகளில் கால்சியம் அளவைக் குறைக்கும், தூக்கத்தைத் தொந்தரவு படுத்தும். நீண்ட இடைவேளைக்கு இடையே கொஞ்சம் கொஞ்சம் காபி சாப்பிடுவது நல்லது.
மாற்று
`லெமன் டீ’ அல்லது காய்கறி சூப் சாப்பிடலாம்.
ஆக்கம்: அதிரைகுருவி

1 comments:

Anonymous said...

yella tasaty sappatayum sapuda kodaduna sonna eppudi sir

enna valkada idu.

Your Comments Please!

இது பற்றிய உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள்.Comments பதிவதில் சிரமம் ஏற்பட்டால் உங்கள் கருத்துக்களை adiraipoonga@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனே பதியப்படும்.